பென்னாகரத்தில்நலம் காக்கும் ஸ்டாலின் ‘ மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக கலப்படம் குறித்த விழிப்புணர்வு ,


பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாகவும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார், மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சார்ந்து அரங்கம் அமைத்து உணவு பாதுகாப்பு , உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து முக்கியமாக பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில், உணவுப்பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், எடை, எண்ணிக்கை, உட்காரணிகள் ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் அலர்ஜி தன்மை குறித்தும் தெளிவாகவும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

கண்காட்சி அரங்கை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ வட்டார மருத்துவ அலுவலர்கள் கார்த்திகேயன், பாபு, பேராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் பார்வையிட்டபோது பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவுப் பொருள்களில்,
வீட்டளவில் எளிதாக கலப்படம் கண்டறிதல் குறித்தும் குறிப்பாக தேயிலை, தேன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம், பச்சை பட்டாணி, சாயம் ஏற்றப்பட்ட பச்சை பட்டாணி, செர்ரி பழம் உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும், அயோடின் உப்பு மற்றும் அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அயோடின் அவசியம் குறித்தும் சைவ அசைவ வேறுபாடு உணவுப் பொருட்களைக் கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளித்தார். அரங்கை பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் பார்வையிட்டார். ,

உயர் அலுவலர்கள், மருத்துவ துறையினர்,காவல் துறையினர், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், முன்னிலையில் நேரடியாக பொருட்களை காட்சிபடுத்தியும், நேரடியாகவும் செயல் விளக்கம் செய்து காட்டி விழிப்புணர்வு செய்யப்பட்டது .
அரங்கில் தரமான, தரமற்ற மற்றும் கலப்படம், கலப்படம் இல்லாத உணவுப் பொருள்கள், தேயிலை, தேன் மற்றும் இதர பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் திரளாக பார்வையிட்டனர். விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.