பென்னாகரம் புறவழி சாலையை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்க செய்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புறவழிச்சாலையான இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிலான நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் திரு.நாகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சாலையில் சரியான அளவு தார்கலவை ஊற்றப்பட்டுள்ளதா மற்றும் சாலையின் அகலம் மற்றும் உயரம் சரியாக அமைக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் திரு.புருஷோத்தமன், பென்னாகரம் உதவி பொறியாளர் திரு.சிங்காரவேலு, மற்றும் சாலை பணி ஒப்பந்ததாரர், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.