பொம்மிடியில் குடிநீர் கேட்டு பெண்கள் பொதுமக்கள் மறியல்போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியில், 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இதில் பொ.நடூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் கடந்த 30ல் பெய்த மழையால் , 50 க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், 900 மீட்டர் அளவிற்கு மழைநீர் செல்ல கழிவு நீர் கால்வாய் அமைக்க குழி எடுக்கப்பட்டது. அந்த பணியால் குடிநீர் குழாய்கள் சேதமானது. இதனால் அப் பகுதியில் உள்ள சுமார் 1,000 குடும்பத்தினருக்கு குழாய்கள் உடைப்பால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.

இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து பலமுறை கேட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் கடந்த 24 ம் தேதி பொம்மிடி காவல் நிலையம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி -தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ.,ஜோதிகணேஷ்
பேச்சுவார்த்தையில், இரண்டு தினங்களில் மழைநீர் செல்ல கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க படும் என உறுதி அளித்தார். இதனால் வரை நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்துவதில்லை அடித்தும் மழைநீர் செல்ல கால்வாய் ஏற்படுத்த கோரியும் பொதுமக்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்
இன்று பொம்மிடி காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன்,எஸ் .ஐ., விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பல்கலைக் கழக தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.