
மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6வது பிரத்யேக ஷோரூமை மதுரை விளக்குத்தூண் துரைக்கண்ணன் நிலக்கிழார் முன்னிலையில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பாரம்பரியமிக்க ஆடைகள் தயாரிப்பில் முன்னணி பிராண்டாக திகழும் ராம்ராஜ் காட்டன், கோவில் நகரமான மதுரையில் தனது 6வது ஷோரூமை காமராஜர் சாலை, சிம்மக்கல் சிக்னல் அருகே, விளக்குத்தூண் பகுதியில் திறந்துள்ளது.
மேலும் ராம்ராஜ் காட்டன் தலைவர் நாகராஜன், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஜாக்கார்டு பார்டர்களுடன் கூடிய வேட்டி மற்றும் சட்டை, கிராண்ட் கலெக்ஷன்களான சுயம்வர கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் லக்ஸ் செட் ஆகிய பண்டிகை கால ஆடைகளையும் அறிமுகப்படுத்தினார்
மேலும் இங்கு ராம்ராஜ் காட்டனின் விதவிதமான வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள் மற்றும் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என ஏராளமான வகைகள் இடம் பெற்றுள்ளது
புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் கூறுகையில், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றாக திகழும் மதுரையில் எங்களின் 6வது ஷோரூமை திறப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை தேர்வு செய்யும் வகையில் இங்கு ஏராளமான ஆடை ரகங்கள் உள்ளன.
பாரம்பரியத்தை தினசரி வாழ்வில் கொண்டு வரவேண்டும் என்பதை மனதில் கொண்டு எங்களின் ஒவ்வொரு ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் எங்களின் இந்த புதிய ஷோரூம் மூலம் மதுரை நகர மக்களுக்கு பாரம்பரியமிக்க ஆடைகள் முதல் நவீன ஆடை ரகங்கள் வரை விற்பனை செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
.
