மத்திய அரசை காரணம் காட்டி தங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காமல் பொம்மை முதலமைச்சர் தங்களை வஞ்சிப்பதாக யாதவ மக்கள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோகுலம் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ சங்கங்கள் இணைந்து தமிழக யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கக் கேட்டு மத்திய மாநில அரசுகளின் கவனம் ஈர்க்கும் வகையில் யாதவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சேகர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள யாதவ மக்களை மிகவும் பிற்படுத்துவோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 இல் இருந்து இன்று வரை இரண்டு தலைமுறைகள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமல் மிகப் பெரிய ஏமாற்றுத்துடன் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அதனை சரி செய்ய தமிழக யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

1.5 கோடி மக்கள் தொகை உள்ள யாதவ மக்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழக அரசு வழங்காமல் மத்திய அரசை காரணம் காட்டி பல ஆண்டுகளாக எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் 200க்கும் மேற்பட்டோர் நடந்து சென்று தங்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.