
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் ரோட்டரி கோயம்புத்தூர் எலைட் சங்கமும் இணைந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். தமிழரின் பாரம்பரிய நடனமான மங்கை வள்ளி கும்மியோடு துவங்கிய இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பானைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தியும், சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் ரோட்டரி கோயம்புத்தூர் எலைட் சங்கமும் இணைந்து பொங்கல் திருவிழாவை கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். தமிழரின் பாரம்பரிய நடனமான மங்கை வள்ளி கும்மியோடு துவங்கிய இந்நிகழ்வில் மாணவிகள் புதிய பொங்கல் பானை, பச்சை மாவு மற்றும் முளைப்பாளிகை ஏந்தி பம்பை இசையுடன் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்தனர்.
யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கோயம்புத்தூர் எலைட் சங்கத்தின் தலைவர் கோபிநாத், கோயம்புத்தூர் எலைட் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருண்கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த பொங்கல் விழாவில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் யுனைடெட் தொழிநுட்ப கல்லூரி, யுனைடெட் கலை அறிவியல் கல்லூரி, யுனைடெட் நர்சிங் கல்லூரி, யுனைடெட் பார்மஸி கல்லூரி, யுனைடெட் பிசியோதெரபி கல்லூரி, யுனைடெட் ஹெல்த் சயில்ன்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் சார்பில் தனித்தனியாக குடில்கள் அமைத்து பொங்கல் வைத்தனர். இதில் சிறந்த பொங்கலுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஊர்க்காவல் படையினைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், போட்டிகளில் பங்கேற்றும் சிறப்பித்தனர்.
தொடர்ந்து கோலப்போட்டி, உறி அடித்தல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் ரோட்டரி கோவை எலைட் சங்கத்தின் உறுப்பினர்கள், யுனைடெட் கல்லூரிகளின் முதல்வர்களும், பேராசிரியர்களும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவினை யுனைட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் முனைவர் சிவகுமார் ஒருங்கிணைத்தார்.
