
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டில் முதல் பிரதோச விழா நடைபெற்றது. நந்திக்கு அபிசேக அலங்கார பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோவிலைச் சுற்றி சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டில் முதல் நாளில் வரும் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது.
முதலில் பெரிய நந்திக்கும் பின்னர் சிவனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீர் உள்ளிட்டவைகளால் அபிசேகங்கள் நடைபெற்றன.
பின்னர் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்அமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா, கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் வடமதுரை, துடியலூர், பன்னிமடை, பழனிகவுண்டன்புதூர், பூச்சியூர், தொப்பம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.வி.மணி தலைமை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அம்சவேணி பழனிச்சாமி, சாமிநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தயாநிதி குருக்கள் தலைமையில் சிவனடியார்கள் இறைவனுக்கு அபிசேக, அலங்கார பூஜைகளை செய்தனர். மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை எல் எம் டபுள்யூ அசோகன், வேல்முருகன், போஸ்ட் ஆபிஸ் சண்முகம், சேகர், குமரபுரம் சண்முகம், சேது, பிரதோச குழுவினர், வெள்ளகிணர் செல்வகுமார், ரவிச்சந்திரன், தணிகைசெல்வன், மோகனசுந்தரம், விஜயகுமார், என்.பி.பாபு, விவீன், அபிசந்திரன், ஜெயபால், காளிதாஸ், அருணாச்சலம், ஆர் பி எம் கண்ணன், சுரேஷ், ஆர் விஜயன், ஜோதிமணி, கலா, ஜெயகொடி, பேபி, ஆடிட்டர் கிரண்ஸ்ரீ, லட்சுமி, தேசிக், மம்தா, ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அதேபோல் வருகின்ற ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விருந்தீஸ்வர கோவில் வளாகத்தில் மார்களி திருவாதிரையை ஒட்டி ஆருத்ரா தரிசன பெருவிழா நடைபெருகிறது. இதில் மஹா அபிசேகம், மகா தரிசனம், திருவீதி உலா, பிரசாத விநியோகம் நடைபெறவுள்ளது.
