வலங்கைமானில் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை வகித்தார், விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம. வேல்முருகன் வரவேற்றார், சீர்காழி புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தங்கமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 140 மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கினார்கள், அவர் பேசுகையில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் பெற்றோர்களை மறக்கக்கூடாது என்றும் நாம் பணியாற்றும் நிறுவனத்திற்கு உண்மையாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நடக்க வேண்டும் என்றும் கூறினார். விழாவில் அனைத்து துறை தலைவர்களும், ஆசிரியர் பெருமக்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உதயசங்கர் அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.