வாணியம்பாடியில் சர்வதேச முதியோர் தினம் – டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் IMA இணைந்து கொண்டாடப்பட்டது

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, வாணியம்பாடி டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் IMA இணைந்து சிறப்பான விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் 96 வயது மூத்தவர் பங்கேற்று தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்தார்.
IMA தலைவர் டாக்டர் பாசுபதி, “முதியோர் காலம் ஒரு அதிசயம்” என உரையாற்றினார்.


டாக்டர் மப்ரூகா கண் பராமரிப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். டாக்டர் நிடி ரோஸ், பெண்களின் உடல்நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

இலவச மருத்துவ முகாம், கலாசார நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.
IMA செயலாளர் டாக்டர் ஜே. டேவிட் விமல் குமார், “முதியோருக்கான 360° பராமரிப்பு அவசியம்” என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முதியவர்கள், பொதுமக்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்