
குடியரசுகட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா பி.வி.கரியமால் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தந்தை சிவராஜ் அன்னை மீனாம்பாள் ஆகியோரின் தலைமையில் குடியரசு கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றியவர்.
விடுதலைச் சிறுத்தைகளை பேரன்புடன் அரவணைத்தவர். அவருக்கு விசிக சார்பில் அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கிச் சிறப்பித்தோம்.

அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். இயக்கத் தோழர்கள் அவரது இறுதி நிகழ்வில் திரளாகப்பங்கேற்று அவருக்கு வீரவணக்கம் செலுத்திடவேண்டுகிறேன் என பி.வி.கரியமால் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.
