
சர்வதேச அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில், மாபெரும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தியது. ஏ. டபிள்யூ. எஸ். ரோட் டூ ரீ இன்வென்ட் 2025 எனும் ஹேக்கத்தான் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அளவில்,
தமிழகத்தை சேர்ந்த இன்ட்யூட்டிவ் ஏஐ எனும் நிறுவனத்தை சார்ந்த, புவனேஸ்வரி சுப்பிரமணி தலைமையிலான அணி,கலந்து கொண்டு இந்திய மதிப்பில் சுமார் ₹90,00,000 லட்சம் பரிசைப் பெற்றுள்ளது.
புதுமையைப் பேசும் “ஓரிக்” பயன்பாடு
குறித்தும், புதுமைமிகு “ஓரிக்” பயன்பாடு, குறித்தும் இவர்கள் வடிவமைத்த சிறந்த தீர்வுக்கு பரிசு கிடைத்தது. தொழில்நுட்பத் திறமை, படைப்பாற்றல்,
புதுமை ஆகியவற்றின் சிறந்த கலவையாக இருந்ததால், இவர்களின் படைப்பு
தேர்வாளர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த நிலையில்,
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வர்
முனைவர் பி. கீதா,
தங்களது முன்னாள் மாணவியான புவனேஸ்வரி சுப்பிரமணி மற்றும் அவருடைய அணிக்கு
இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை
“இந்தியாவின் பெருமை” எனப் புகழ்ந்து,
தனது கல்லூரியின் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக பாராட்டியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
