கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சா பாளையம் பகுதியில், நடைபெறும் உலக சாதனை நிகழ்வு! 2000 பெண்கள் சுமார் 30 நிமிடங்களில், தையல் கலை, அழகு கலை, ஆரி வேலைகளை செய்து அசத்தி சாதனை பக்கத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பி. கே. புதூர் பகுதியில், ஸ்ரீ ராமசாமி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட், எஜிகேஷனல் மற்றும் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பாக பல்வேறு பெண்களுக்கு சுய தொழில், மற்றும சுய முன்னேற்ற பயிற்சிகள் இலவசமாக வழங்க பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த பச்சா பாளையம் பகுதியில் மகளீர் வாழ்வாதாரத்திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. டாக்டர் மகேஷ்வரி சிவபிரகாசம் ஒருங்கினைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டனர். இதில் பயிற்சி பெற்ற 2000 மகளீர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், 2000 பெண்கள் சுமார் 30 நிமிடங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை பக்கங்களிலும் இடம் பிடித்தனர். இவர்களது திறனை ஆய்வு செய்த இன்டர்நேஷனல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் க்ரோனிக்கல் என்ற அமைப்பு இவர்களது சாதனையை ஏற்று சான்றிதழ்களும் வழங்கி பெருமை படுத்தியது. இதனை
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மகேஸ்வரி சிவபிரகாசம் கூறியதாவது..
சுயதொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டல் மற்றும் வருமான உயர்வு குறித்த சிறப்பு ஆலோசனைகள் இந்த முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு வழங்கப்பட்டதாகவும், மகளிர் தொழில் முனைவோர்களுக்கான அரசு நலத்திட்டங்கள், மற்றும் நிதி உதவி திட்டங்கள், குறித்து இங்கு கலந்து கொண்ட எடுத்துரைக்கப்பட்டதாகவும், 2000 மகளிர்களின் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வும், இந்த மேடையில் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவர்களின் திறன்களை அறிந்து, அவர்களுக்கு சுய தொழில், அல்லது சுய வேலைவாய்ப்பு சேவைகளை வழங்கும் திட்டங்களை எங்களது அமைப்பின் சார்பாக வழங்கி வருகின்றதாகவும் தெரிவித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மகளீர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றதாகவும், இதில் தையல் பயிற்சி, ஆரி வேலைகள், டிசைன் வேலைகள், அழகு கலை பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் இலவசமாவகே வழங்கி வருகின்றதாகவும் தெரிவித்தார். இங்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடந்த மூன்று முதல் 6 மாத காலங்களில் 2000 மகளிர்கள் இத்தகைய பயிற்சிகளை முறையாக கற்று கொண்டுள்ளனர். அவர்கள் கற்று கொண்டதை உறுதி படுத்தும் வகையில், அவர்களுக்கு இன்று சான்றுகள் வழங்கபட்டது என்று தெரிவித்தார்.