திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். மலைவாசன் முதன்மை கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள். உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த திருப்பத்தூர் பிரபாகரன். பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்