ராயக்கோட்டை பூ மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை


ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்திப்பூவை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். முன்பெல்லாம் ஆயுத பூஜை, விஜயதசமியை எதிர்நோக்கி மட்டுமே சாமந்தியை விளைச்சல் செய்துவந்த நிலையில், இப்போது பூவுக்கு தேவை அதிகமிருப்பதால் வருடம் முழுக்க விளைச்சல் செய்கின்றனர்.
ஆயுத பூஜையின் போது கிலோ சாமந்திப்பூ ரூ.300 வரை விற்பனையானது. அதன்பிறகு பூவிற்கான தேவை இல்லாததால் கிலோ ரூ.100 வரையே விற்பனையானது. இப்போது திருமணங்கள், விழாக்கள் போன்றவை இல்லாததால் ஒரு கிலோ சாமந்தி ரூ.40 வரையே விற்பனையாவதால், அதை பறிக்கும் கூலி கூட கிடைப்பதில்லை என்று வருத்தமடைகின்றனர்.