ஆசிரியர் நகர் பகுதியில் புதிய பெட்ரோல் பங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவர்

வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை துணைத் தலைவர் RR. வாசு ரிப்பன் வட்டி திறந்து வைத்தார்

பின்னர் காருக்கு டீசல் போட்டு முதல் விற்பனையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி மற்றும்

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ,

அதிமுக ஜோலார்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் மணிகண்டன், மற்றும் புதுக்கோட்டை பஞ்சாயத்தின் ஆறாவது வார்டு உறுப்பினர் விக்ரமன், அதிமுக மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.