திருவாரூர் மாவட்டத்திற்கு குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க திருவையாறு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்குஜம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .
அப்போது திருவையாறு தாலுக்கா விளாங்குடி ஊராட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பெண்களும் ,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ ,கே ,ஆர். ரவிச்சந்தர் மற்றும் விளாங்குடி திருஞான சேகர்ஆகியோர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தஞ்சாவூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல குடிநீர் வடிகால் வாரியம் சிமெண்ட் குழாய் பதிக்கும் வேலை நடந்து வருகிறது.

குழாய் பதிக்கும் பாதையில் குடியிருப்புகளும் ,கடைகளும் உள்ளது இதனால் விவசாயிகளும் .வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர் ,உதவி பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை, உதவி பொறியாளர் ,வருவாய் ஆய்வாளர், விளாங்குடி கிராம விவசாயிகள் ,வியாபாரிகள் ஆகியோர் அடங்கிய அமைதி பேச்சு வார்த்தை எவ்வித முடிவும் எடுக்காத நிலையில் மீண்டும் குழாய் பதிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கும் , வியாபாரிகளுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும் மெயின் ரோடு வழியாக சிமெண்ட் குழாய் பதிப்பதற்கு பதிலாக பாசன வாய்க்கால் கரையில் சிமெண்ட் குழாய்களை பதித்து பொதுமக்களுக்கும் , விவசாயிகளுக்கும் , ‘வியாபாரிகளுக்கும் இடையூறு இல்லாமல் திருவாரூர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல ஆவண செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வருகை தந்த அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.