பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பேருந்து நிலையத்தில் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.
அதன் மீது மது போதையில் ஒரு இளைஞர் ஏரி, காட்டுக் கூச்சல் எழுப்பி, சத்தமிட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
தகவல் அறிந்து அங்கு சென்ற ஏரியூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே இறங்கி வந்தார்.

பின்னர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஏரியூர் அருகே உள்ள ஈச்சப்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜி என தெரியவந்தது.
குடும்ப தகராறு காரணமாக, அதிக குடி போதையில் உயர் மட்ட தண்ணீர் தொட்டி மீது ஏறியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இவர் இது போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல
இதற்கு முன்பு ஏரியூர் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், மது போதையில் படுத்துக்கொண்டு, பேருந்துகள் உள்ளே நுழையாதவாறு, அழிச்சாட்டியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
