ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து ஊசி போட்டு கொடூர கொலை செய்த 2வாலிபர்கள், மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவர் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதேபோல் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா தாய் காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார்.

அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19),குபேந்திரன் என்கிற நிபுயா (19), மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

வீட்டிலிருந்த காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து கொண்டனர்.இவர்கள் மூவரும் உள்ளே சென்று குணசேகரனின் உடலில் குபேந்திரன் காலியாக உள்ள ஊசியை ஏற்றினார்.

விஜயகுமாரும் லித்தினியா ஸ்ரீயும், விஜயகுமாரும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்துள்ளனர்.காமாட்சியும், சுலோச்சனாவும் வெளியில் இருந்து காவல் காத்துள்ளனர்

தற்கொலை நாடகம்

பின்னர் அவர்கள் தூக்கில் குணசேகரனை தொங்கவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர்.

மனைவி காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார் புகாரின் பேரில் கோட்டை காவல்துறையினர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் பிரேத பரிசோதனையின் முடிவில் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலை

மேலும் இது தற்கொலை அல்ல கொலை என்பது தெரிய வந்துள்ளது. இதன் பேரில் காவல்துறையினர் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி மனைவி காமாட்சி, சுலோச்சனா, விக்கி, குபேந்திரன், விஜயகுமார் ஆகிய 5பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து தீவிர விசாரணை செய்தனர்.  

பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்கொலை என இருந்த சம்பவம், மனைவியே கொலை செய்தது அறிந்த அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.