
வ
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் நகரில் அமைந்துள்ள தமிழகத்தின் சிறந்த யுனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா சங்கமம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை தடுப்பது மரக்கன்றுகள் நடுவது காற்று மாசுபாட்டை தடுப்பது பேரிடர் மேலாண்மை, முதலுதவி பெண்களுக்கான அரசின் உதவி எண்,தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தைப் பற்றிய பாடம் கற்பிக்கப்பட்டு பனை மரத்தால் ஏற்படும் சுத்தமான காற்று மாசு பற்றியும் விளக்கி கூறப்பட்டது
நமக்காக சிறிய இடம் இருந்தாலும் அதை முறையாக பயன்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வைப்பது, மூலிகைச் செடிகள் வளர்ப்பது, பல்லுயிரும் பகுத்துண்டு வாழ்வதற்காக பழ வகை மரங்களும் தனது இடத்தில் உள்ளதை மாணவிகளுக்கு செயல்முறை பாடமாக எடுத்துக் கூறி அங்கு இயற்கை முறையில் விளைந்திருந்த முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக்காய் வழங்கப்பட்டது மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலசலிங்கம் பல்கலை வேளாண்மை மாணவிகள் சீதாப்பழ மரக்கன்றுகளை நட்டனர். நாம் வெளியில் எங்கு சென்றாலும் நம்முடன் 300 கிராம் எடையுள்ள செல்போனை எடுத்துச் செல்வது வழக்கமாக ஒன்றானது போல் நாம் நெகிழிப் பையை தடுக்கும் விதமாக நம்மிடம் எப்போதும் 30 கிராம் எடையுள்ள துணிப்பை என்றும் கையில் இருக்க வேண்டும் என்பதனை பாடமாக எடுத்துக் கூறி நெகிழிப்பையால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது இந்த நிகழ்வில் கலசலிங்கம் வேளாண் மாணவிகள் ராஜேஸ்வரி, சுருதி, நிஷாலினி, அடைக்கல மேரி, சிந்துஜா, அன்னபூரணி ஆகியோர் நேரடி அனுபவக் கல்வியாக கற்றுச் சென்று விழிப்புணர்வு பெற்றனர். சங்கமம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் இந்த நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்திருந்தார்
