தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அரசு நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை காணொளி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் பகுதியில் அமைந்துள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணையினை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு முடிவடைந்த பணிகளை நேற்று காணொளி காட்சிகளாக திறந்து வைத்தார் .அதனை தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏகுத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தர்மபுரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கோகுலரமணன் ,கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கதிரேசன் , பென்னாகரம் தாசில்தார் லட்சுமி ,
ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வள மேற்பார்வையாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் மீனவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
