தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், குச்சமங்கலம் லைன் டேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் யின் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அரசு ஆரம்ப சுகாதார நிலைய பாளையப்பட்டி செவிலியர் பியூலா பெண்களுக்கான புற்று நோயின் அறிகுறிகள் என்ன என்பதையும், மார்பக புற்று நோய் என்றால் என்ன ,கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன அதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ளலாம் விளக்கி பேசினார்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நடைபெற்ற பரிசோதனை முகாமில் நான்கு பெண்களுக்கு மார்பக புற்று நோயின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாரனேரி வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு முகாமில்35க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சியை சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்டின் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

