நாட்டு நலபணித்திட்ட முகாம் நிறைவு விழா

தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், 14.11. 2024 முதல்

  1. 11.2024 வரை ஏழுநாள் சிறப்பு முகாமின் நிறைவு விழா 20.11.2024
    அன்று எண்டப்புளி
    ஊராட்சியை சேர்ந்த
    ஜே.கே. காலணியில் நடைபெற்றது. விழாவிற்கு அருட்தந்தை அந்தோணி பால்சாமி, OFM, RTU, தலைவர், இயக்குனர் ஜி.கல்லுப்பட்டி மற்றும் ஆமோஸ், RTU, கிராம வளர்ச்சி பிரிவு, மேலாளர் G.கல்லுப்பட்டி கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார்கள். எம்.பாண்டியன்
    முன்னிலை வகித்தார். ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின் முதல்வர் முனைவர். அருட்சகோதரி. ஜேசுராணி ஆசியுரை வழங்கினார்கள்.
    செயலர் முனைவர்.
    அருட்சகோதரி.
    சாந்தாமேரி ஜோசிட்டா சிறப்புரை ஆற்றினார்கள். அதிமுக தேனி கிழக்கு மாவட்ட செயலர் முருக்கோடை ராமர் மற்றும் மாநில இணை செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியகுளம், மேற்கு ஒன்றிய செயலர் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் வி.அன்னபிரகாஷ் கலந்து கொண்டார். முனைவர். அருள் இருதய ஜெயந்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வரவேற்புரை வழங்கினார்.
    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர்பா. அமலா
    ஜாஸ்மின் மற்றும்
    முனைவர் ஜா.இமாகுலேட் ராணி முகாம்அறிக்கையினை சமர்ப்பித்தனர்.
    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களின் சார்பாக ரூபாய் 34,000/- மதிப்பிலான ஆறு கட்டில்கள், நாலு அயன்பாக்ஸ்கள்,24 நாற்காலிகள்,ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு ரூபாய் 14 ஆயிரம் சிறப்பு விருந்தினர்
    அப்பாஸ் மைதீன் வழங்கப்பட்டதோடு, நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கான நண்பகல் உணவும் தனது தாராள மனதையும், உதவும் பண்பையும் வெளிப்படுத்தியுள்ளார் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளின் சார்பாக கலை நிகழ்ச்சிகள்
    நடத்தப்பட்டன. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் செ. கஸ்தூரி மற்றும் பேராசிரியர்
    எ. சகாய மெர்லின் நன்றியுரை வழங்கினார்கள். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருட்சகோதரி அருள் சுனிலா, திட்ட அலுவலர்களும், ஆலோசகர்களும் , பொது மக்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளும், எண்டப்புளிபஞ்சாயத்து உறுப்பினர்களும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.