திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா பகுதியைச் ராஜாமணி மகள் ரேவதி என்பவரை 2019 ஆம் ஆண்டு கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது சவரன் தங்கநகைக்காக அவருடைய சித்தப்பா மகனான செல்வராஜ் மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த சித்ரா என்பவரும் ஒன்றிணைந்து விறகு வெட்டுவதாக கூறி சுட்டகுண்டா காப்பு காட்டு பகுதிக்கு அழைத்துச்சென்று துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி இருவரும் கொலை செய்துள்ளனர்.
இதனை உமராபாத் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து இதன் வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த நிலையில் இதன் வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரேவதி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் மாவட்ட நீதிபதி மீனா குமாரி ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றதற்காக மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் மற்றும் அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் சாட்சி கூறிய மீனா, ராஜேஷ், வெங்கடேசன், ஆகிய மூவருக்கும் இலவச சட்ட மையம் சார்பில் தல ஒரு லட்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் PT. சரவணன் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
