ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார்.முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பொங்கல் வைத்தனர்.தமிழ்த்துறை கம்பன் கழகம் சார்பில் இன்றைய இளைஞர்கள் நமது பாரம்பரியத்தைப் போற்றி வளர்க்கிறார்களா?மாற்றி சிதைக்கிறார்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.பின்பு பானை உடைத்தல்,சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல்,கயிறு இழுத்தல் என பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
