கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் காவல் நிலையம், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அறிவுறுத்தலின்படி,இராயக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரிய தம்பி ஆலோசனைப்படி, கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசுக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி டிக்கெட்கள் விற்பனை நடைபெறுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர்
சிற்றரசு, தலைமையில்
காவலர்கள் சந்திரன்,சுகுமாரன் ஆகியோர் கெலமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் வார சந்தையில் புளியமரம் அருகில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் பொழுது காவல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்பொழுது
வரகானப்பள்ளியை சேர்ந்த மாதேஷ் வயது 27, தந்தையார் பெயர் மஞ்சு,
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நல்லநேரம், தங்கம்-என்ற மொத்தம் 5 லாட்டரி டிக்கெட்கள் மற்றும் விற்பனை பணம் 200 ரூபாய் பறிமுதல் செய்து இவர் மேல் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர்.
