தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிற்பகல் 3மணி முதல் சுமார் 1 மணிநேரமாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு வீட்டின் மேற்கூறைகள் பெயர்ந்துள்ளது சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் செல்கிறது. கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கம் தெருவில் ஈஸ்வரன் என்பவர் வீட்டின் மேற்கூரை காற்றின் வேகத்திற்கு தாங்காமல் பெயர்ந்து வீட்டின் பின்புறம் விழுந்துள்ளது. மேலும் மழைநீர் சரியாக சாக்கடை கால்வாய்களில் செல்லமுடியாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்காமல் இருப்பதாலும் குப்பைகள் தேங்கி கழிவுநீரும் மழைநீரும் செல்லமுடியாதவண்ணம் உள்ளது . கம்பம் நகராட்சி நிர்வாகம் முறையாக சாக்கடை கால்வாய்களை சுத்தம்செய்து மழைகாலங்களில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



