கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டரின் துவக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது..

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில், “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” எனும் மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு ஆஸ்திரேலியா அரசின் முன்னாள் அமைச்சர், அலனாஹ் மெக் டியர்னன், ஆஸ்திரேலியா அரசின் சட்டத்துறை தலைமை வழக்கறிஞரின் உதவி அமைச்சர் யாஸ் முபாரகாய், ஆஸ்திரேலியாவின் ரிவர்டன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இதனை திறந்து வைத்தனர்
டிஸ்பெப்சியா சென்டர் குறித்து மூத்த குடலியல் நிபுணரும், விஜிஎம் மருத்துவமனையின் தலைவருமான, டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறியதாவது..
ஜீரணக்குறைபாடு உலகளவில் 20 சதவீகிதம் முதல் 30 சதவீத மக்களை பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினை, இதில் சுமார் 20 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே தெளிவான காரணம் கண்டறியப்படுகிறது. மீதமுள்ள பலருக்கும், காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு என வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலும் முழுமையான ஆய்வுகள் இல்லாமல் பொதுவான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது,
பொதுவாக நீடித்த ஜீரணக்குறைபாடு அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு எண்டோஸ்கோப்பி மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், அவை சாதாரணமாக இருந்தால், காரணம் தெரியாத நிலை என கருதி பொதுவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையை மாற்றும் வகையில், விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர் அமைக்க பட்டுள்ளது. இம்மையம் துல்லியமான நோயறிதல் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இந்த மையத்தில் தொற்றை கண்டறிய கதிர்வீச்சு இல்லாத மூச்சுப் பரிசோதனைகள், கார்போஹைட்ரேட் உணவுகளை ஜீரணிக்க முடியாத நிலை, சிறுகுடல் பாக்டீரியா அதிகரிப்பு, வயிற்றின் இயக்கக் குறைபாடு போன்ற பல காரணங்களை கண்டறிய நவீன பரிசோதனை வசதிகள் அமைக்கப்பட்டுள்தாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் வி.ஜி.எம். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், எண்டோஸ்கோபி இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி; மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன், கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.