தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவர்களை கண்டறிந்து அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற செய்து வருகிறார்கள்

அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 27 பயனாளிக்கு ரூ.266.00 இலட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 15 பயனாளிகளுக்கு 147.00 இலட்சம் இலக்கீடு எய்தப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 144 பயனாளிக்கு ரூ.115.00 இலட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 75 பயனாளிகளுக்கு 90.00 இலட்சம் இலக்கீடு எய்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் முத்தான திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 57 பயனாளிக்கு ரூ.269.00 இலட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 25 பயனாளிகளுக்கு 276.00 இலட்சம் இலக்கீடு எய்தப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 68 பயனாளிக்கு ரூ.220.00 இலட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 92 பயனாளிகளுக்கு 215.00 இலட்சம் இலக்கீடு எய்தப்பட்டுள்ளது.
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயனடைந்த திருவாரூர் மாவட்டம், நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியினை சேர்ந்;த வினோபா, என்பவர் தெரிவித்ததாவது
நான் இளங்கலை பல் அறுவை சிகிச்சை படித்துள்ளேன். நான் சொந்தமாக பல் மருத்துவமனை தொழில் துவங்க எனது நீண்ட நாள் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், பல் மருத்துவமணை தொழில் துவங்க திட்டமிடப்பட்டு மாவட்ட தொழில் மையத்தினை தொடர்பு கொண்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் விண்ணபித்து ரூ.8.00 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டு ரூ.2.80 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கினார்கள். இதன்மூலம் புதிய தொழில் முனைவோர் என்ற நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தி தந்துள்ளார்கள். எங்களை போன்றவர்களின் எதிர்கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு நாங்கள் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்த திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், மூலங்குடி பகுதியினை சோந்த திரு.பிரசன்னா என்பவர் தெரிவித்ததாவது
நான் படித்து முடித்துவிட்டு சிறு தொழில் செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்யை கொண்டு, நான் வாழ்ந்து வந்தேன் எனக்கு தொழில் தொடங்கி குறைந்தபட்சம் நான்கு நபர்களுக்காவது, வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், கம்பிவேலி உற்பத்தி தொழில் துவங்க திட்டமிடப்பட்டு மாவட்ட தொழில் மையத்தினை தொடர்பு கொண்டு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணபித்து ரூ.17.00 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டு ரூ.4.25 இலட்சமமானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கினார்கள். இதன்மூலம் புதிய தொழில் முனைவோர் என்ற நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தி தந்துள்ளார்கள் எங்களை போன்றவர்களின் எதிர்கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு நாங்கள் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
