
கோவை சிங்காநல்லூர் அடுத்த வசந்த் நகரில், ரியல் கேஜி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மருத்துவமனை துவக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ராகவேந்திர் மருத்துவமனையின் நிறுவனரும், சித்திரை செவிலியர் கல்லூரி மற்றும் மதுரை ஈவ் சீட் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் எம் முருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார், தொடர்ச்சியாக இந்திய மெடிக்கல் அசோசியேசன் தமிழ் நாடுகிளை நியமன தலைவர்
டாக்டர் ஏ.கே. ரவிக்குமார், இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் தமிழ்நாடு கிளை முன்னாள் செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் கோவையின், நிதி செயலாளர் டாக்டர் பாலமுருகன், மற்றும் கோவை நீரிழிவு சிறப்பு மைய நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி பாலமுருகன் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை தலைவர் ஆறுமுகம், ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள சிறப்பம்சங்கள், வார்டுகள், அறுவை சிகிச்சை அறை, ஐசியூ, அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு அறை, நோயாளிகள் அறை, என அனைத்து கட்டமைப்புகளும் மருத்துவமனையில் எவ்வாறு செயல்படுத்த பட்டுள்ளது என்பதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் எம் முருகன் கூறியதாவது..
நாளுக்கு நாள் மருத்துவமனையின் தேவைகள் மக்களுக்கு அதிகரித்து வருகின்றன. புதிய புதிய நோய் தொற்றுக்கள், புதிய புதிய சிகிச்சை முறைகள் என மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து வருகின்றது. அத்தகைய வளர்ச்சிக்கு ஏற்ப இங்கு துவங்கப்பட்டுள்ள புதிய ரியல் கேஜி மருத்துவமனையில் நிறுவ பட்டுள்ளது. மேலும் சிறப்பம்சமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இந்த மருத்துவமனையை துவக்கியுள்ளனர் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து இம்மருத்துவமனையை துவங்கியுள்ளனர் அதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை, மருத்துவமனையின் இயக்குனர் லதா கஜேந்திரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
