கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள, கெளமார மடாலயத்தில், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சங்கமம் 2026 எனும் தலைப்பில் நடைபெற்ற கல்வி ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது…

கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, சங்கமம் 2026 எனும் தலைப்பில் விழிப்புணர்வு விருதுகள் வழங்கும் விழா கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். தற்போது நடைபெற்று நிறைவு பெற்ற 2025 மற்றும் 2026 கல்வியாண்டில் அரசு மற்றும்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த, மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல் உறுப்பு தானம் வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தில் பசுமையை காப்போம் என்ற தலைப்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் அமிர்தா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் அமைப்பின் தலைவர் கோவை சந்திரன், பிரேமா கோகுல், செயலாளர் பீர்முகமது, பொருளாளர் கோவை கீதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் நிறுவன தலைவர் அமிர்தா பாலசுப்பிரமணியம் கூறியதாவது.. மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கமாக உள்ளது ,இது ஒரு பொதுநல இயக்கம், இன்றைய மனித இனத்திற்கு தேவையான கல்வி, உணவு, மருத்துவம், தரமாகவும், இல்லாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே, இந்த அமைப்பின் குறிக்கோள் என்று தெரிவித்தார். மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பாலமாக செயல்பட்டு, மக்களின் அன்றாட தேவைகளை பெறுவது எனவும், எங்கெல்லாம் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் மக்களின் ஒருமித்த குரலாய் ஒழித்து, மக்களை பாதுகாக்கும் ஒரு இயக்கமாக இந்த இயக்கம் இயங்கி வருகின்றது, சாதி, மதம், இனம், மொழி, அரசியல், சக்திகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் ஒன்றே என்று இணைக்கும் இயக்கமாக இந்த மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இயங்கி வருகின்றதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.