
நீதியரசர் கற்பக விநாயகம் வழிகாட்டுதலின் படி, மாதாமாதம் பல்வேறு சமூக சேவை பணிகளை, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை வ உ சி பூங்கா அருகே, உள்ள தி கேரளா க்ளப் அரங்கில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைந்து விழாவினை சிறப்பித்த பிரபு, பிரபு விஜயலட்சுமி ஆகியோர் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
விழாவில், அமைப்பின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, வழக்கறிஞர் தேன்மொழி, கற்பகம் அகாடமி சார்பாக டாக்டர் கதிரவன், மற்றும் சிங்கப்பெண் சிறப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் அனிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவுக்கான வரவேற்புரையை அமைப்பின் நிறுவன தலைவர் ஆர். கே. குமார் வழங்கினார். தொடர்ந்து இச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்க படும் அநீதி, குறித்தும் பெண்கள் இன்னும் விழிப்படையாத நிலை குறித்தும், சட்ட நிலை குறித்தும் தங்களது கருத்துகளை முன் மொழிந்தனர். தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து சிங்கப்பெண் உதவி ஆய்வாளர் அனிதா அனைவரது மத்தியிலும் எடுத்துரைத்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது.
பெண்களிடம் இந்நாட்டை புரட்டி போடும் நெம்புகோல் உள்ளது. அவை பெண்களின் தன்னம்பிக்கை, சுய தைரியம், சமூக மரியாதை, உள்ளிட்ட பல்வேறு பொருப்புகளை சுமந்தபடி பெண் இச்சமூகத்தில் பயணிக்கிறாள் பெண்களின் வாழ்க்கை வட்டம் மிகவும் குறுகியது. அதில் வென்று சாதனை பெண்களாக இன்று நாடுமுழுவதும் பல பெண்கள் முன்வந்து கண்டிருக்கிறார்கள், போராட்ட களத்திற்கு வருவதே முதல் வெற்றியாக நாண் கருதுகின்றேன் என்று சூழுரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் அகில இந்திய பொது செயலாளர் வி. ஹெச். சுப்பிரமணியம், அமைப்பின் வழக்கறிஞர் பிரிவு மூத்த வழக்கறிஞர் சுந்தரபாலன், அமைப்பின் துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, அமைப்பின் மாநில மகளீரணி தலைவி லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ் குமார், டாக்டர் கதிரவன், வழக்கறிஞர் தேன்மொழி, சீடாமணி, கந்தவேல், திருப்பூர் ராமசாமி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவி எல்ஐசி சாந்தி, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், இசை கலைமாமணி சாந்தினி, மாவட்ட செயலாளர் விஜயராவ், தலைவர் ஐஸ்வர்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
