
இந்த புனித ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 நவம்பர் மாதம், முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடந்தது. பழைய ஆலயத்தில் 3 கோபுரங்களில் 3 சொரூபங்கள் நிறுவப்பட்டு இருந்தன. ஆனால், தற்போதுள்ள புதிய ஆலயத்தில் லூர்து மாதா, சூசையப்பர், அந்தோணியார், வேளாங்கண்ணி மாதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புனிதர்களின் சொரூபங்கள் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள புதுமைக்கல், லூர்து அன்னையின் பீடத்தில் பதிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இந்த அர்ச்சிப்பு விழாவிற்கு திருச்சி சலேசிய மறை மாநில லைவர் தாஸ் கென்னடி, முன்னாள் திருச்சி சலேசிய மறை மாநில தலைவர் அகிலன் சர்பரசாதம், பங்கு தந்தை ஜார்ஜ், உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், பிரபு அஜிலாஸ், ஜேப்பிசன் மற்றும் சலேசியர்கள், மறைமாவட்ட குருக்கள், துறவியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தநிகழ்ச்சியில், சென்னை, பெங்களுரு, சிவகங்கை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து அன்னையின் ஆசிர் பெற்று சென்றனர்.
