உலக சுற்றுச்சூழல் தினம் ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.இதில் திடக்கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டு, கிராம மக்களின் பங்களிப்புடன் பல ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிராமத்தை பசுமையாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது குறித்தும், வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்குப் பிறகு, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஊட்டமலை தலைமை ஆசிரியர் கூத்தரசன் மற்றும் அரசு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.