மதுரையின் காலத்தால் அழியாத பண்பாட்டு பாரம்பரியத்தில் நவீன சௌகரியத்தின் புதிய அடையாளமாக ‘தி ரெசிடென்சி சிக்னேச்சர்

மதுரையின் சொகுசு விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது தி ரெசிடென்சி சிக்னேச்சர் இந்த அற்புத கட்டிடக் கலைப் படைப்பு, மதுரையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது.
ஏழு ஏக்கர் பரப்பளவிலும், சுமார் ஐந்து லட்சம் சதுர அடிகளிலும் விரிந்துள்ள இந்த பிரம்மாண்ட வளாகம், தமிழ்நாட்டின் மிகப் பெரிய மற்றும் உயர்தர விருந்தோம்பல் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. மிகச்சிறந்த உணவு அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர் திரு. வோங் சியூ மேன் (WoW – Warner Wong Architects) வடிவமைத்துள்ள இந்த ஹோட்டல், மதுரையின் கோவில் கட்டிடக் கலையின் பிரம்மாண்டத்தை நவீன கலைநயத்துடன் மறுவடிவமைக்கிறது. மேலும், புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தால் ஈர்க்கப்பட்ட சுமார் 300 தூண்கள், மதுரையின் கட்டிடக் கலை பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றன.
புனித நகரமான மதுரையின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டலிலிருந்து, மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு ராஜகோபுரங்களையும், திருப்பரங்குன்றத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது. மதுரையில் மிகச் சில முகவரிகளுக்கே கிடைக்கும் இந்த காட்சியமைப்பு, இவ்விடத்தின் தனிச்சிறப்பாகும்.
இந்த வளாகம், சொகுசு ஹோட்டல் மற்றும் பிரம்மாண்ட மாநாட்டு மையம் என இரண்டு தனித்துவமான தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இணைந்து தென்னிந்தியாவில் விருந்தோம்பலின் வரையறையை மாற்றியமைக்கிறது.
186 அதிநவீன வசதிகளுடன் கூடிய அறைகள், மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள 5 பிரத்யேக அறைகள் ஆகியவற்றை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

தி ரெசிடென்சி ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. ரவி அப்பாசாமி கூறுகையில்:
“தி ரெசிடென்சி சிக்னேச்சர் மதுரை என்பது வெறும் ஒரு ஹோட்டல் அல்ல; மதுரையின் பண்பாட்டிற்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாகும். நகரின் பாரம்பரிய கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட இந்த முகவரி, பாரம்பரியம், கலைநயம் மற்றும் நவீன சொகுசு மீதான எங்களின் ஆழ்ந்த பற்றை பிரதிபலிக்கிறது. இத்தகைய உணர்வுபூர்வமான முக்கியத்துவம் கொண்ட ஒரு அடையாளத்தை மதுரைக்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. தென்னகத்தின் பண்பாட்டு தலைநகரின் ஆன்மாவை கொண்டாடும் நிலையான அடையாளமாக இது திகழும் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.

ஹோட்டலின் அறைகள், நவீன சொகுசின் சிறந்த வெளிப்பாடுகளாக திகழ்கின்றன. சுமார் 2,000 சதுர அடியில் அமைந்துள்ள பிரசிடென்ஷியல் ஸ்யூட், இரண்டு ஆடம்பரமான படுக்கையறைகள், விசாலமான லிவிங் ரூம்கள், தனிப்பட்ட பட்லர் சேவை மற்றும் கோவில் கோபுரங்கள், ஏரியின் மயக்கும் காட்சிகளை வழங்குகிறது.
1,500 சதுர அடியில் அமைந்துள்ள எக்ஸிக்யூட்டிவ் ஸ்யூட் மற்றும் விசாலமான லிவிங் ரூம்களுடன் கூடிய கிளப் ஸ்யூட்கள், நேர்த்தியான வடிவமைப்பின் மூலம் உயர்தர தங்கும் அனுபவத்தை வழங்குகின்றன.
மதுரையின் பண்பாட்டு அடையாளங்களால் ஈர்க்கப்பட்ட கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள பிரீமியம் அறைகள், நகரின் மிகப் பெரிய அறை வகைகளில் ஒன்றாகும். ஸ்மார்ட் iPad கட்டுப்பாடுகள், அறை தானியக்க வசதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொகுசு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக சுவைகளும், உள்ளூர் பாரம்பரியமும் இணையும் உண்ணும் அனுபவம்
சித்திரை, மதுரையின் திருவிழா மாதத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்த நாள் முழுவதும் செயல்படும் உணவகம், உள்ளூர் பாரம்பரிய சுவைகளிலிருந்து உலக சமையல் சிறப்புகள் வரை பயணிக்கும் தனித்துவமான மெனுவை வழங்குகிறது. 147 விருந்தினர்கள் அமரக்கூடிய இந்த உணவகம், காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுகிறது.
ஈடன், ஹோட்டலின் பிரீமியம் பார், “Garden to Glass” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமையான பான அனுபவங்களை நேர்த்தியான சூழலில் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்றுண்டி, ஆழ்ந்த மாலை நேர அனுபவங்கள் ஆகியவற்றால் மெருகூட்டப்படுகிறது. இது மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும், மேலும் இங்கு 72 பேர் வரை அமரலாம்.

சின் சின், சென்னையிலும், கோயம்புத்தூரிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஓரியண்டல் உணவகத்தின் புதிய வடிவமாகும். இதன் தனித்துவமான சுவைகள், பரிச்சயம் மற்றும் சீரான தன்மைக்காக அறியப்படும் இந்த உணவகம், குடும்பங்கள், இளம் விருந்தினர்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற ஒரு மேம்பட்ட ஓரியண்டல் உணவு அனுபவத்தை உறுதியளிக்கிறது. இரவு 7:00 மணி முதல் இரவு உணவிற்காக திறந்திருக்கும் …