
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 18 நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் அனுமதி வழங்கி பின்பு ஒகேனக்கல் பரிசல் துறைக்கு சென்று மலர் தூவி பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், அதிகளவில் தண்ணீர் வரத்து வரும்பொழுதும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு தடையில்லாமல் அனுமதி வழங்க வேண்டும், வெள்ளப்பெருக்கு காலங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் பரிசல் ஓட்டைகள் வலியுறுத்தினர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும் பரிசல் ஓட்டிகள், மீன் சமையல் தொழிலாளர்கள், ஆயில் மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைத்து, பரிசல் ஓட்டின்களின் கோரிக்கைகளை செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல் இயக்கத்தை மேற்கொள்ளனர். 18 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் பயணம் தொடங்கியுள்ளது. இந்த நாளில் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் G.K. மணி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
