தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக ராஜ்குமார் நியமனம்: பென்னாகரத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!

தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வசதி நகர்புற மேம்பாடு துறை அமைச்சர் ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து பென்னாகரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ரஞ்சித், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் வருகை புரிந்தனர்
தருமபுரி மாவட்டத்தின் புதிய பொறுப்பு அமைச்சராக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த த.வெ.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர். பின்னர், ராஜ்குமார் நியமனத்தை வரவேற்கும் விதமாக பட்டாசுகளை வெடித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், பள்ளி தாளாளர் முருகன், நகர செயலாளர் அரவிந்த், மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.