இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி தலைமையில் வாசிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுடன், தருமபுரி மக்களவை உறுப்பினர் ஆ மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, முதன்மை கல்வி அலுவலர் ஐ ஜோதி சந்திரா உள்ளிட்ட பலர் இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்தனர்.
