வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

பல்நோக்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
ராயக்கோட்டை,நவ.29-
வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயகனஅள்ளி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு பதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தொகுதி எம்எல்ஏவும், அதிமுக துணைப்பொது செயலாளருமான கே.பி. முனுசாமி கலந்துக்கொண்டு பதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டு பணியை துவக்கி வைத்தார். நகழ்ச்சியில் திரளான அதிமுகவினர் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அங்கு அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதாகியுள்ளதை பார்வையிட்டு அதை இடித்துவிட்டு பதிய வகுப்பறை கட்டிடம் கட்டவும், பள்ளிக்கு கலை அரங்கம் கட்டவும் ஆவன செய்யப்படும் என உறுதியளித்தார். பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதித்தார். மாணவ- மாணவியரின் ஆங்கில கல்வி கற்றலை கண்டு பாராட்டினார். சத்துணவு கூடத்தையும் பார்வையிட்டு சோதித்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மனுநீதி, பட்டதாரி ஆசிரியர் தானப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.