வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு.

வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு.

நவம்பர் – 28
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழகி அழுகும் நிலையில் உள்ளது. அம்மாபேட்டை அருகில் உள்ள உக்கடை பகுதிக்கு வேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் திருமதி.பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் வேளாண் துறை அமைச்சரிடம் பாதிப்புகள் குறித்து தெரிவித்தார் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை முழுவதுமாக தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக வருவாய்துறை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார், உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர். செய்தி.ஏ .கே.சுந்தர் தஞ்சாவூர்.