தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர் .அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை, உறுதி மொழி ஏற்பு.

சட்ட மாமேதை டாக்டர். பி .ஆர். அம்பேத்கர் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர செயலாளர் ஆர் .பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாநில செயலாளரும், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் தலைமையில் ,தமிழ்நாடு விவசாய சங்க மூத்த தலைவர் வீர. மோகன், முன்னிலையில் எஸ் கருணாநிதி, கே. மாரிமுத்து ,பி. செல்வராஜ், எஸ். சாந்தா , ஆர் .சந்தானகிருஷ்ணன் , காதர் உசேன், எம் . சதாசிவம், உள்ளிட்ட முன்னணி தோழர்கள் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.