மத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை .

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மாடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தமிழ்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவர் செந்தில் சிகப்பூரில் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் மாடரஹள்ளி வீட்டில் தமிழ்மணி (26) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். அக்கம்பக்கத்தினர் பார்த்து மத்தூர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த மத்தூர் போலீசார் சிங்கப்பூரல் உள்ள கணவர் செந்திலுடன் தொடர்பு கொண்டு பேசியபோது, கடந்த 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தததாகவும், மருத்துவமனைக்கு போகச்சொல்லி அறிவுறுத்தியிருந்தேன் என காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.