திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தளபதி விலையில்லா விருந்தகம் மாவட்ட மாணவரணி செயலாளர் சாந்தகுமார் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
மேலும் இங்கு தொடர்ந்து 100 நாட்களாக ஏழைஎளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வரும், நிலையில் நூறாவது நாளான இன்று நூற்றுக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த மாவட்ட மாணவரணி செயலாளர் சாந்தகுமார், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பாலமுருகன், சம்பத்குமார், நவீன், ஜான் சாமுவேல், மற்றும் விருந்தக பொறுப்பாளர்கள், ராஜா, பிரேம்குமார், விமல், மார்ட்டின், டேனியல், கலை, வெற்றி, தரணி, ரவி வர்மன், விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக நகர மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு உணவினை வழங்கி வருகின்றனர்.
