குறைந்தபட்ச ஆதார விலை!விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி! விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 20,21 தேதிகளில் தஞ்சையில் 27 ஆவது மாநில மாநாடு! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 வது மாநில மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் தேசியக்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் ஏஐடியூசி சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் திருச்சி இந்திரஜித், கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தேசிய குழு உறுப்பினர் மு.மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்ற விவசாயிகளின் நிலை, அரசுகளின் பாராபட்ச நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த உறுதிமொழிகளான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் விவசாயிகள் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்தல், விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் தடையின்றி கிடைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27ஆவது மாநில மாநாட்டை வருகிற 2025 பிப்ரவரி 20,21 ஆகிய இரண்டு தேதிகளில் தஞ்சாவூரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் 85 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு நிதிக்குழு,
உணவுக்குழு, மாநாட்டு அரங்க குழு , விளம்பரக் குழுக்களை உள்ளடக்கிய செயற்பாட்டு குழு அமைக்கப்பட்டது.

மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாநாட்டு செயலாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, பொருளாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சோ. பாஸ்கர், துணைத் தலைவர்களாகஅ.பன்னீர்செல்வம், இரா.ராமச்சந்திரன் துணைச் செயலாளர்களாக ச. வடிவேல் மூர்த்தி,அ.கலியபெருமாள் ,பொறுப்பாளர்களாகநா.சௌந்தர்ராஜ், கோ. சக்திவேல், சி.பக்கிரிசாமி, சி.ஜெயராஜ்,பா .பாலச்சுந்தரம், வீர மோகன், கோ. பாஸ்கர், தி.திருநாவுக்கரசு,பி.கருணாமூர்த்தி, து.ரவி, சி. வீரமணி, வி.தட்சிணாமூர்த்தி,சி.செல்லக்கண்ணு, எம்.அய்யாராசு, எம்.துரைராசு பி.குணசேகரன், கோ.ராமலிங்கம், உள்ளடக்கிய வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.

கூட்டத்தில்
மிக அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம், மழையினால் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், முழுமையான வடிகால் வசதிகள் இல்லாததாலும், ஏரி,குளங்கள் ஆழப்படுத்தப் படாததாலும் மழைக் காலங்களில் நீரை சேமிக்க முடியவில்லை. எனவே, வரும் காலங்களில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும் , குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது