இராமநாதபுரம்-மதுரை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் இராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பட்டியல் வகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் மாவட்ட தலைவர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தித்தொடர்பாளர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சேக்கிழார் தொடக்கவுரையாற்றினார்.நிறுவனத் தலைவர் கருப்பையா,மாநிலத் துணைத் தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாவட்ட நிதி செயலாளர் ராமர்,மாவட்ட இணைச்செயலாளர் பாண்டியராஜன்,மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அன்னக்கிளி,ரங்கநாயகி,மாவட்டத் துணை செய்தி தொடர்பாளர் சுரேஷ்,மாவட்டத் துணை அமைப்பாளர்கள் மாதவன்,கர்ணன்,மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார்,திருவாடானை பொறுப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் மரியம் ஜேம்ஸ்,மாநில துணைத்தலைவர் பாலச்சந்திரன்,மாநில டாஸ்மாக் தலைவர் வேலு செல்வகுமார்,பொறியாளர்கள் குருதிவேல்மாறன்,ஜெயதுரை, ராஜேந்திரன்,பேராசிரியர்கள் ஜெய முருகன்,சந்திரசேகர்,தாசில்தார் வரதராஜன்,மருத்துவர் பிரசாத்,மக்கள் கூட்டமைப்பு மாநில மைய நிர்வாகி மாடசாமி ஆகியோர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்கிற தலைப்பில் கருத்துரை வழங்கினர்.பட்டியல் வகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயிற்சியை மதுரை சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் வழங்கினார்.இக்கருத்தரங்கில் எஸ்.சி/எஸ்.டி ஊழியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பேசப்பட்டது.சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெறும் பதவி உயர்வு மற்றும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முடிவில் மக்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் களத்தாவூர் அழகேசன் நன்றி கூறினார்.இக்கருத்தரங்கத்தை ராமர்,அழகுக்குமார்,சுபாஷ் சந்திரபோஸ்,வீரக்குமார்,பூப்பாண்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
