ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் தலைவர் தனபாலன் (தி இந்து தமிழ்) தலைமையில்,பொருளாளர் மகேஷ்வரன் (சத்தியம் டி.வி) முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சங்க இணைச்செயலாளர் பிரபு ராவ்(பாலிமர் டிவி),முருகேசன் (கலைஞர் டிவி),சரவணன் (சன் டிவி),ராமு (மக்கள் குரல்),லிங்கேஸ்வரன் (நியூஸ் ஜெ),பரமேஸ்வரன் (தினகரன்), மோகன் பாத செல்வம் (செய்தி அலசல்),பாகற் செழியன் (ராஜ் டிவி),ரபீக் (இமயம் டிவி),உட்பட ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வேஷ்டி வாரத்தை முன்னிட்டு அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை வேஷ்டி அணிந்து சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.