பர்கூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. பர்கூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் முரளிவிஜய் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். முன்னதாக பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து பர்கூர் பேருந்து நிலையம் எதிரே த.வெ.க. கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 200க்கும் மேற்பட்ட ஏழை பொது மக்களுக்கு நிலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் மாற்று கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

பின்னர் பேசிய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் முரளிவிஜய், 2026ல் தளபதி விஜய் அவர்களை முதலவராக்குவது மட்டுமே ஓரே குறிக்கோள். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சிக்கு கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள் பொது மக்கள் என 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.