திருப்பத்தூர் அருகேஅங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது‌. நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரீஸ்வரர் மற்றும் நடராஜருக்கு பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 54 வகையான வாசனை திரவியங்களால் சுமார் 2 மணி நேரம் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து கார்த்திகேயன், தேவசேனாதிபதி மற்றும் சிவாச்சாரியார்களால் ரட்ஷை கொடுக்கப்பட்டது.பின்னர் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.