
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் பூட் கேம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் தொடக்க நாளில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கீதா இத்தகைய பைதான் பூட்கேம்ப் மாணவர்களின் எதிர்காலத் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும் புதிய தொழில்நுட்ப உலகில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் என வலியுறுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் இந்நிகழ்வில் பத்துக்கும் மேற்பட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். இந்நிகழ்ச்சியை கணினி அறிவியல் புல முதன்மையர் முனைவர் ரஞ்சிதா குமாரி மற்றும் முதுகலைத் தரவு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சித்ரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்
இப்பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
