கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், உள்ள வாக்காளர்களுக்கு வாரி இழைக்கபடும் பணம்! கண்டு கொள்ளாமல் கண்மூடிய நிலையில் தேர்தல் ஆணையம்! தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் பரபரப்பு பேட்டி

கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம்.
இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..
கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகின்றதாகவும்,
தற்போது கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில், சிலிண்டர் சின்னத்தில் போட்டிட்டு வருகிறேன். தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், திமுகவினர், மற்றும் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ரூபாய், 1000 முதல் 2500 ரூபாய் வரையிலும் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கோவை வடக்கு தொகுதியில் 5000 ரூபாய் வழங்கபட்டு வருகின்றது. இதனை தேர்தல் ஆணையம் கட்டுபடுத்த முடியாமலும், தடுக்க முடியாமலும் இருக்கும் நிலை உள்ளது. எனவே நியாயமான முறையில் இந்த தேர்தல் நடக்க வேண்டும் கோவை மாவட்டத்தில் பணம் பட்டுவாடா செய்யும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்க்கு இது சம்பந்தமாக, பேக்ஸ் மூலம் புகார் மனு அளிக்க பட்டுள்ளது என தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் என்ற நிலையை கோவையில் திமுக, அதிமுக இரு பெரிய கட்சிகளும் செய்து வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். திராவிட கட்சிகளின் இத்தகைய செயல், ஜனநாயக விரோத செயலாக கருதுவதாகவும், இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க படவில்லை, ஆனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளோ இத்தகைய பணம் வழங்குபவர்களை கண்டு கொள்ளாமல், சாலையில் அப்பாவி பொதுமக்களையும், வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை பிடித்து தனது பணியை திறம் பட செய்து விட்டதாக காட்டி கொள்கின்றது என தெரிவித்தார். எனவே வாக்காளர்களுக்கு பணம் தரும் கட்சிகாரர்கள், மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக வாக்குக்கு பணம் பெறும் வாக்காளர்கள் என அனைவரின் மீதும் பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.