
நாம் தமிழர் கட்சி இரண்டு சௌராஷ்டிரா வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு முழு ஆதரவு
மதுரை கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சௌராஷ்ட்ரா அரசியல் நடவடிக்கை குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது பேசிய பிரசாந்த் சர்மிளா பிரகாஷ்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் சௌராஷ்ட்ரா சமூகம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவரை சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் .தற்போது நாம் தமிழர் கட்சி இரண்டு சௌராஷ்ட்ரா வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் அதேபோல் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் விரைவில் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவிக்க உள்ள நிலையில் சௌராஷ்ட்ரா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை அறிவித்தால் வெற்றி வாய்ப்புள்ள ஒரு சமூக வேட்பாளருக்கு மட்டுமே தனது அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கும். மேலும்
கட்சி பாகுபாடுகளைத் தாண்டி, நமது சமூகத்திற்கான முறையான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தருவதே இந்த அமைப்பின் நோக்கம்
தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் ஆலோசித்து,
சமூக வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில் நமது அரசியல் பலத்தை முன்னிறுத்தி தகுதியான பிற வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும்.
இதன் மூலம் பிற கட்சிகளின் ஆதரவை நமது முதன்மை வேட்பாளருக்குப் பெற்றுத் தருவதோடு, நமது வாக்காளர்களின் நலனையும் பாதுகாக்க முடியும்.
அரசியலில் மகளிரின் பங்களிப்பை அதிகப்படுத்தி, அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பதில் அமைப்பு தனிக்கவனம் செலுத்தும்.
மொழிவாரி சிறுபான்மை சமூகத்திற்காக மாநில மத்திய அரசால் அமைக்கப்படும் குழுவில் அங்கம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
